தந்தையின் இயக்கத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்: குடும்பக் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

தந்தையின் இயக்கத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்: குடும்பக் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

மார்க் ஆண்டனி மற்றும் குட் பேட் அக்லி போன்ற அதிரடி கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது குடும்ப கலைஞர்கள் இணையும் புதிய மெகா ப்ராஜெக்ட் குறித்த சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். தனது தந்தை ரவி கந்தசாமி புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், அப்படத்திற்குத் தாமே முழுமையான கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியுள்ளதாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரனின் சகோதரர் மனு ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இயக்கம், மூத்த மகன் கதை மற்றும் திரைக்கதை, இளைய மகன் இசை என முழுக்க முழுக்க ஒரே குடும்பத்தின் திறமைகள் ஒன்றிணையும் இந்த புதிய திரைப்படத்தில் நடிக்கப்போகும் முன்னணி கதாநாயகன் யார் என்பது உள்ளிட்ட முழு விவரங்கள் இன்னும் இரண்டு மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

· @_movietamil

பழைய செய்திகள்