இயக்குநர் கவின்-முகேன் ராவ் படத்தில் ஆதித்யா கதிர்: புதிய அப்டேட் வெளியீடு!
எஸ்.எஸ்.ஆர் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் ஆதித்யா கதிர் இணைந்துள்ளார். இயக்குநர் கவின் இயக்கும் இப்படத்தில் முகேன் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடும் வண்ணமயமான பொழுதுபோக்குப் படமாக இது உருவாகி வருகிறது. ஆதித்யா கதிர் இப்படத்தில் இணைந்திருப்பதால் படம் முழுவதும் நகைச்சுவை கலாட்டாவுக்குப் பஞ்சமிருக்காது என்று படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். தேஜு அஸ்வினி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இப்படத்தின் முக்கிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
· Actor Kayal Devaraj