அதிதி ஷங்கர் பாடி நடித்துள்ள இருவர் ஆல்பம் பாடல்: நவம்பர் 4ல் வெளியீடு
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் நடிகை அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள இருவர் என்ற தனித்துவமான மெல்லிசைப் பாடல் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இயக்குனர் குமரன் இயக்கத்தில் உருவான இந்த இசை ஆல்பத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, அதிதி ஷங்கர் மற்றும் சூரஜ் சந்தோஷ் இணைந்து மனதை மயக்கும் குரலில் பாடியுள்ளனர். சரிகம ஒரிஜினல்ஸ் மற்றும் ஸ்டோன் ப்ரூக் பிலிம்ஸ் இணைந்து இந்த சுயாதீன பாடலை வழங்குகின்றன. நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் தடம் பதித்து வரும் அதிதி ஷங்கரின் இந்த புதிய முயற்சி இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. நவம்பர் 4 அன்று இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகிறது.
· Actor Kayal Devaraj