சைமா 2026 விருதுகளில் சிறந்த அறிமுக நடிகர் விருது வென்றார் ஆதித்யா மாதவ்!

சைமா 2026 விருதுகளில் சிறந்த அறிமுக நடிகர் விருது வென்றார் ஆதித்யா மாதவ்!

தென்னிந்திய திரையுலகின் மிகவும் கவுரவமிக்க 'சைமா 2026' (SIIMA 2026) விருது வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் 'அதர்ஸ்' (OTHERS) திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இளம் நடிகர் ஆதித்யா மாதவ் மிகவும் நம்பிக்கைக்குரிய அறிமுக நடிகர் விருதை வென்றுள்ளார். திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த ஆதித்யா மாதவுக்கு இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது குறித்து திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது நுணுக்கமான முகபாவனைகளும் வசன உச்சரிப்பும் இப்படத்தில் பாராட்டுகளைப் பெற்றன. தனது கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த விருதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஆதித்யா மாதவ், மேலும் சிறந்த கதைக்களங்களைத் தேர்வு செய்து ரசிகர்களை மகிழ்விக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அவரது அடுத்தடுத்த புதிய திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.

· Prosathish

பழைய செய்திகள்