ராவடி படத்தின் முதல் பாடல் அட்ரா பரமா: அறிவு குரலில் நவம்பர் 4-ல் வெளியீடு!
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் பேசில் ஜோசப் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் முதல் பாடலான 'அட்ரா பரமா' வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'பேக்பெஞ்சர்ஸ்களின் முதல் எச்சரிக்கை' என்ற அதிரடியான கேப்ஷனுடன் தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமார் தரப்பிலிருந்து இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அக்ஷய் குமார், ஜாஃபர் சாதிக், நோபில் ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பல இளம் திறமைசாலிகள் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைப்பில் உருவான இப்பாடலை உதய் எழுதியிருக்க, பிரபல பாடகர் அறிவு தனது துள்ளலான குரலில் பாடியுள்ளார். கல்லூரி மற்றும் இளைஞர்களின் கலாட்டாவை பின்னணியாகக் கொண்ட கதையாக இது உருவாகியுள்ளதால் பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ராவடி திரைப்படம் வரும் டிசம்பர் 24, 2026 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. நவம்பர் 4 அன்று வெளியாகும் அட்ரா பரமா பாடல் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj