அறிவின் அதிரடிக் குரலில் 'அட்ரா பரமா': பசில் ஜோசப்பின் 'ராவாடி' முதல் பாடல் நாளை ரிலீஸ்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் மலையாள முன்னணி நடிகர் பசில் ஜோசப் கதாநாயகனாக நடிக்கும் 'ராவாடி' திரைப்படத்தின் முதல் பாடலான 'அட்ரா பரமா' பாடலின் சுவாரசியமான முன்னோட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். பிரபல பாடகர் அறிவு பாடியுள்ள இந்த துள்ளலான பாடல் நாளை மாலை 6 மணிக்கு முழுமையாக வெளியாகவுள்ளது. உதய் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலின் புரோமோ ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இப்படத்தில் அக்ஷய் குமார், ஜாஃபர் சாதிக், நோபல் ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன் உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். நகைச்சுவையும் துள்ளலும் நிறைந்த பாடலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் கொண்டாட்டக் கதையாக உருவாகும் 'ராவாடி' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தாக வரும் டிசம்பர் 24 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது வெளியாகியுள்ள முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
· Actor Kayal Devaraj