வைப் ஏற்றும் அட்ரா பரமா பாடல் வெளியானது: டிசம்பர் 24ல் வெளியாகும் ராவடி!

வைப் ஏற்றும் அட்ரா பரமா பாடல் வெளியானது: டிசம்பர் 24ல் வெளியாகும் ராவடி!

துடிப்பான இசையும் நடனமும் கொண்ட ராவடி திரைப்படத்தின் முதல் பாடலான அட்ரா பரமா அனைத்து முன்னணி ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் தனது அனல் பறக்கும் வேகமான பீட்களுடன் இப்பாடலை இளைஞர்களைக் கவரும் வகையில் உற்சாகமான கொண்டாட்டப் பாடலாக அமைத்துள்ளார். ரசிகர்களை ஆட வைக்கும் துள்ளலான வரிகளுடனும் செவிகளை ஈர்க்கும் சிறப்பான ரிதத்துடனும் அமைந்துள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களிலும் ரீல்ஸ்களிலும் தற்போது வேகமாக ட்ரெண்டாகி வருகிறது. பாடல் வெளியான குறுகிய நேரத்திலேயே இசைப் பிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக தயாராகியுள்ள ராவடி திரைப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறைப் பண்டிகையை ஒட்டி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

· @tamilcinexpress

பழைய செய்திகள்