முன்பதிவு தொடங்கியது: அக்டோபர் 2இல் வெளியாகும் ஃபஹத் ஃபாசிலின் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'!
ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் நடிப்பில் சாகசப் பயணக் கதையாக உருவாகியுள்ள 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளன என்று பிரபல பி.ஆர்.ஓ பிரதீஷ் சேகர் அறிவித்துள்ளார். சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களின் வேடிக்கையான பயணத்தைக் காண சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். சஷாங்க் ஏலேட்டி இயக்கியுள்ள இப்படத்தை பாகுபலி தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். கால பைரவாவின் இசை மற்றும் விறுவிறுப்பான சாகசக் காட்சிகள் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர் விடுமுறை தினங்களை முன்னிட்டு முன்பதிவு நல்ல வேகமெடுத்துள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி புதன்கிழமை அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
· Propratheesh