அக்டோபர் 23ல் திரைக்கு வரும் 'ஹைகூ': தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்புடன் தொடங்கிய கொண்டாட்டம்!
இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் மற்றும் ஸ்ரீதேவி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள 'ஹைகூ' (Haiku) திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பிரீ ரிலீஸ் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் உற்சாகமாக நடைபெற்றது. வரும் அக்டோபர் 23 ஆம் தேதி இத்திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள தகவலை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். காதலும் உணர்வுகளும் கலந்த குடும்பக் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் மினல் முரளி புகழ் ஃபெமினா ஜார்ஜ் மற்றும் அதிர்ச்சி அருண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சித்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரியேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு ஊடகங்கள் மத்தியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் படக்குழுவினர் படத்தின் சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 23 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Actor Kayal Devaraj