165 நிமிடமும் தலைவர் ஆதிக்கம்: வெளிநாட்டு விநியோகஸ்தர் அகிம்சா என்டர்டெயின்மென்ட் உற்சாகப் பதிவு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் 165 நிமிடங்கள் கொண்டதாக அமையவுள்ளதை வெளிநாட்டு விநியோகஸ்தரான அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. திரையரங்குகளில் ரஜினி ரசிகர்களுக்கு 165 நிமிடமும் முழுக்க முழுக்க சூப்பர்ஸ்டாரின் அதிரடி ஆதிக்கம்தான் என்று படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் இப்படத்தை மிகப்பெரிய அளவில் திரையிடத் திட்டமிட்டுள்ள அகிம்சா என்டர்டெயின்மென்ட், படத்தின் ரன்டைம் குறித்த இந்த அப்டேட்டைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த உடனே அது சர்வதேச அளவில் உள்ள ரஜினி ரசிகர்களிடையே பெரும் அலையை உருவாக்கியுள்ளது. 2 மணி நேரம் 45 நிமிடங்கள் கொண்ட இந்த ஆக்ஷன் கொண்டாட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் தொய்வு இருக்காது என்று திரை வட்டாரங்கள் பேசுகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் 2, உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 15 அன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
· @_movietamil