அஜய் தேவ்கன் பிறந்தநாள் ஸ்பெஷல்: 'ஆர்ஆர்ஆர்' படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
பாலிவுட் முன்னணி நட்சத்திரம் அஜய் தேவ்கனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் உருவாகும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ மற்றும் போஸ்டரை இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தலைமையிலான படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் துப்பாக்கி குண்டுகள் பாயும் களத்தில், கண்களில் ஆக்ரோஷமும் முகத்தில் உறுதியும் ததும்பும் ஒரு புரட்சிப் போராளியாக அஜய் தேவ்கன் தோன்றியுள்ளார். அவரது தோற்றமும் பின்னணியில் ஒலிக்கும் இசையும் இணையத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன் ஒரு மிக முக்கிய கௌரவத் தோற்றத்தில் வலம் வர உள்ளார். அவரது அழுத்தமான கதாபாத்திரம் படத்தின் திருப்புமுனையாக அமையும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Penmovies