அஜித்தின் 'டேர்டெவில்' படத்தில் இணைந்த முன்னணி நட்சத்திரங்கள்: அதிகாரப்பூர்வ தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்
அஜித் குமார் நடிக்கும் 'டேர்டெவில்' திரைப்படத்தின் நட்சத்திர பட்டாளம் குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமீபத்திய பேட்டியில் சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ கிளிப் தற்போது அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதை இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் முக்கிய வேடங்களில் நடிகர் பார்த்திபன், பிரபு மற்றும் 'புஷ்பா' புகழ் சுனில் ஆகியோர் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஆதிக்கின் முந்தைய படமான மார்க் ஆண்டனியைப் போல இதிலும் வலுவான நட்சத்திர கூட்டணி அமைந்திருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்துள்ளதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
· @_movietamil