அனல் பறக்கும் பைக் சண்டை காட்சிகள்: அஜித் குமாரின் 'வலிமை' டிரெய்லர் வெளியானது!

அனல் பறக்கும் பைக் சண்டை காட்சிகள்: அஜித் குமாரின் 'வலிமை' டிரெய்லர் வெளியானது!

அஜித் குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை சோனி மியூசிக் சவுத் வெளியிட்டுள்ளது. இணையத்தையே அதிர வைக்கும் வகையில் வெளியான இந்த டிரெய்லரில் அஜித்தின் அசாத்திய பைக் சண்டை காட்சிகள் ரசிகர்களை மிரள வைத்துள்ளன. போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் அஜித்துக்கு எதிராக கார்த்திகேயா வில்லனாக மோதுகிறார். யுவன் சங்கர் ராஜாவின் அதிரடியான பின்னணி இசை டிரெய்லருக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் மேக்கிங் தரம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கும் வலிமை படத்தின் டிரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

· Sony Music South

பழைய செய்திகள்