டூப் இல்லாமல் அஜித் செய்த அதிரடி கார் சண்டை காட்சி: விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

டூப் இல்லாமல் அஜித் செய்த அதிரடி கார் சண்டை காட்சி: விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு

விடாமுயற்சி திரைப்படத்தில் எந்தவித டூப்பும் இல்லாமல் நடிகர் அஜித் குமார் சுயமாக நிகழ்த்திய ஆபத்தான கார் ஸ்டண்ட் காட்சியின் வீடியோவை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அஜர்பைஜானில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடந்த இந்த அசாத்திய சாகசம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காரை அதிவேகமாக இயக்கி கவிழ்க்கும் இந்த சாகசக் காட்சியில் அஜித் குமாருடன் சக நடிகர் ஆரவ் உடன் இருந்தார். சற்றும் எதிர்பாராத விபத்து நேர்ந்த போதிலும், உடனே சுதாரித்துக் கொண்டு சக நடிகரின் நலம் விசாரித்த அஜித்தின் தைரியமும் அர்ப்பணிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. எந்த ஆபத்தான காட்சியாக இருந்தாலும் தானே துணிந்து களமிறங்கும் அஜித்தின் இந்த அசாத்திய அர்ப்பணிப்புக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

· Lyca Productions

பழைய செய்திகள்