ஏகே படத்தின் வில்லன் வேட்டை முதல் ஸ்ரீலீலா கதாபாத்திரம் வரை: சுரேஷ் சந்திரா பகிர்ந்த 4 சுவாரசிய தகவல்கள்!
அஜித் குமார் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டுகளை அவரது மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா அண்மையில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த சுவாரசியமான தகவல்களை மூவி தமிழ் தளம் தனது எக்ஸ் பக்கத்தில் தொகுத்து வெளியிட்டுள்ளது. இது தல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்றொருபுறம், இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே படத்திற்கான இரண்டு அதிரடிப் பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டாராம். மேலும், நடிகை ஸ்ரீலீலா இந்த வாய்ப்பிற்காக ஒரு வருடம் பொறுமையாக காத்திருந்ததாகவும், நடனத் திறமையும் அபார துடிப்பும் கொண்ட ஒரு முக்கிய பாத்திரத்தில் அவர் தோன்றவுள்ளதாகவும் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். படத்தில் அவர் அஜித்தின் மகளாக நடிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் வருகை கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட போதிலும், உன்னி முகுந்தன் நடித்தால் இந்தியா முழுவதும் நல்ல தாக்கம் ஏற்படும் என்று அஜித் குமாரே அவரை நேரடியாக தேர்வு செய்துள்ளாராம். அடுத்தடுத்து வெளியாகும் இந்த அறிவிப்புகளால் படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளது.
· @_movietamil