அஜித் நடிக்கும் கிளாடியேட்டர்ஸ் ரிலீஸ் எப்போது: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன சுவாரசிய தகவல்!
அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் கிளாடியேட்டர்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த சுவாரசியமான தகவலை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். நடிகர் அஜித் குமார் புதிதாகத் தொடங்கியுள்ள கோல்டன் டிராபி பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாகும் இப்படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். முதலில் இந்தத் திரைப்படத்தை ஷாலினி அஜித்தின் பிறந்தநாளான நவம்பர் 19 அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்ததாக ஆதிக் தெரிவித்துள்ளார். ஆனால், தனது பிறந்தநாளில் படத்தை வெளியிட வேண்டாம் என்றும், அதற்குப் பதிலாக ரசிகர்களுக்குப் பண்டிகை விருந்தாகப் பெரிய விழாக்காலத்தில் வெளியிடலாம் என்றும் ஷாலினி கேட்டுக் கொண்டாராம். இதனால் தற்போது இப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு வருகிறது. அஜித்தின் அசத்தலான அதிரடி ஆக்ஷன் களமாக உருவாகும் கிளாடியேட்டர்ஸ் திரைப்படம் 2027 பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் ஏகே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
· @_movietamil