திரையரங்குகளில் ஆட்டம் ஆரம்பம்: பட்டாசுகளுடன் வெறித்தனமாக களமிறங்கிய அஜித்தின் துணிவு!
அஜித் குமார் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. 'துணிவு ஆட்டம் ஆரம்பம்' என்ற கொண்டாட்ட முழக்கத்துடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தின் திரையரங்கு வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் அஜித் குமார் நெகட்டிவ் ஷேடு கலந்த கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியுள்ளார். அதிகாலை 1 மணி முதல் தொடங்கிய சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் மேள தாளங்களுடன் திரையரங்குகளை திருவிழாக் கோலமாக மாற்றியுள்ளனர். ஜிப்ரானின் அதிரடி பின்னணி இசை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைப்பதாக திரையரங்குகளில் இருந்து வரும் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகை ரேஸில் துணிவு திரைப்படம் வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.
· Red Giant Movies