மீண்டும் இணைந்த அஜித், திரிஷா ஜோடி: விடாமுயற்சி மூன்றாவது லுக் போஸ்டர் வெளியீடு
அஜித் குமார் மற்றும் திரிஷா இணைந்து நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களுக்குப் பிறகு மீண்டும் இந்த எவர்கிரீன் ஜோடி திரையில் இணைந்திருப்பது ரசிகர்களுக்குப் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அஜித்தும் திரிஷாவும் தம்பதியராகத் தோன்றுவதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய போஸ்டரில் இருவரின் கெமிஸ்ட்ரியும் தோற்றப் பொலிவும் சினிமா பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஆக்ஷன் களத்திற்கு மத்தியில் மலரும் இந்த அழகான காதல் கதை படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
· Lyca Productions