தல அஜித்தின் 30 ஆண்டுகால சினிமா பயணம்: 'நாங்க வேற மாரி' பாடல் இன்று இரவு ரிலீஸ்!
நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்வதை கொண்டாடும் வகையில், 'வலிமை' படத்தின் முதல் பாடலான 'நாங்க வேற மாரி' இன்று இரவு 10:45 மணிக்கு வெளியாகும் என சோனி மியூசிக் அறிவித்துள்ளது. நீண்ட நாட்களாக வலிமை பட அப்டேட்டுக்காக தவமிருந்த ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமைந்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இப்பாடல் அஜித்தின் தனித்துவமான மாஸ் கொண்டாட்டப் பாடலாக உருவாகியுள்ளது. அஜித் ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நள்ளிரவில் பாடல் ரிலீஸாகும் இந்த செய்தி வெளியானதுமே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
· Sony Music South