அஜர்பைஜான் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்த அஜித்தின் விடாமுயற்சி படக்குழு: அடுத்த லொகேஷன் தயார்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் பிரம்மாண்ட அஜர்பைஜான் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. பல வாரங்களாகக் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடும் குளிருக்கு மத்தியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் அஜர்பைஜானில் படமாக்கப்பட்டுள்ளன. அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோரும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பங்கேற்றனர். அஜர்பைஜான் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதிய லொகேஷனில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Lyca Productions