2.0 படத்தைத் தொடர்ந்து அஜித்தின் விஸ்வாசம்: அமெரிக்க உரிமையை கைப்பற்றிய பிரைம் மீடியா!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘2.0’ பட வெளியீட்டுக்கு பிறகு, தல அஜித் குமார் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை முதல்முறையாக பெற்றுள்ளதாக பிரைம் மீடியா நிறுவனம் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 அன்று படம் வெளியாகும் நிலையில், ஜனவரி 9 அன்றே பிரீமியர் காட்சிகள் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள சென்டிமென்ட் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தல அஜித் மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள குடும்ப திரைப்படமான விஸ்வாசத்தை அமெரிக்காவில் உள்ள தமிழ் ரசிகர்கள் பெரிய திரையில் கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.
· Primemediaus