உலகமெங்கும் ஆகஸ்ட் 24-ல் வெளியாகும் தல அஜித்தின் 'விவேகம்': அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது படக்குழு!

உலகமெங்கும் ஆகஸ்ட் 24-ல் வெளியாகும் தல அஜித்தின் 'விவேகம்': அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது படக்குழு!

தல அஜித் குமார் நடிப்பில் சர்வதேச உளவுத்துறை பின்னணியில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான 'விவேகம்' வரும் ஆகஸ்ட் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பிஆர்ஓ டயமண்ட் பாபு உறுதிப்படுத்தியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று உலகளவில் சாதனை படைத்துள்ளன. அஜித்தின் சர்வதேச ஏஜென்ட் லுக் மற்றும் மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல கொண்டாட ரசிகர்கள் இப்போதே தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

· Idiamondbabu

பழைய செய்திகள்