ஏழு கடல் ஏழு மலை படம் என்னை மிரட்டிவிட்டது: அஜு வர்கீஸ் புகழாரம்!

ஏழு கடல் ஏழு மலை படம் என்னை மிரட்டிவிட்டது: அஜு வர்கீஸ் புகழாரம்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தைப் பார்த்து பாராட்டி மலையாள நடிகர் அஜு வர்கீஸ் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நிவின் பாலியின் நெருங்கிய நண்பரும், இயக்குநர் ராமின் புதிய படமான 'பறந்து போ' படத்தில் நடிப்பவருமான அஜு வர்கீஸ், இத்திரைப்படம் ஒரு அபாரமான சினிமா அனுபவம் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார். நிவின் பாலி மற்றும் சூரியின் தனித்துவமான நடிப்புத் திறன் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையில் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளதாக அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஏற்கனவே திரையிடப்பட்டு பலத்த கைத்தட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் மிக விரைவில் பொதுத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

· @xpresscinema

பழைய செய்திகள்