ஜியோ ஹாட்ஸ்டாரில் 'அலி பாபா அவுர் 40 பூத்' கிராண்ட் ஃபினாலே: இந்த வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட முடிவு!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தயாரிப்பில் குழந்தைகளையும் பேண்டஸி பிரியர்களையும் கவர்ந்த 'அலி பாபா அவுர் 40 பூத்' இணையத் தொடரின் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலே இந்த வெள்ளிக்கிழமை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக எக்ஸ் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. யக்ஷியின் கொடூரத் தாக்குதல்களையும் மகாதீஷின் கொடிய சூழ்ச்சிகளையும் எதிர்த்து அலி பாபா சந்திக்கும் இறுதிப் போரும் பயங்கர சோதனைகளும் இந்த இறுதி அத்தியாயத்தில் உச்சக்கட்டத்தை எட்டுகின்றன. திகிலும் மாயாஜாலமும் கலந்த அதிரடி காட்சிகளும், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் சண்டைகளும் இத்தொடரின் முடிவை நோக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பேண்டஸி மற்றும் மாயாஜால சாகசத் தொடர்களை விரும்பிப் பார்க்கும் ஓடிடி ரசிகர்களுக்கு இந்த கிராண்ட் ஃபினாலே முழுமையான விறுவிறுப்பான பொழுதுபோக்கை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் குழந்தைகளும் குடும்பத்துடன் கண்டு ரசிக்க ஏற்ற அற்புதமான இறுதி அத்தியாயமாக இது தயாராகியுள்ளது.
· Jiohotstar