'அலியாஸ் ருக்மிணி' படத்தின் நாயகி அறிமுகம்: ருக்மிணியாக ஆஃபியா சையத்!
தெலுங்கு திரையுலகில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் புதிய படமான 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படத்தில் ருக்மிணி என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஆஃபியா சையத்தின் அழகிய அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நவீன பெண்ணின் துணிச்சலும் கவர்ச்சிகரமான ஆட்டிடியூடும் கலந்த ஒரு தனித்துவமான பெண் பாத்திரமாக, கதாநாயகன் கிருஷ்ணாவின் மனதை கொள்ளையடிக்கும் ருக்மிணியாக ஆஃபியா சையத் நடித்துள்ளார். வெளியான வீடியோவில் அவரது வசீகரமான தோற்றமும் கலகலப்பான நடிப்பும் இளைஞர்களைக் கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. கதாநாயகியின் இந்த புதிய தோற்றம் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. காதலும் இளமை துள்ளும் பொழுதுபோக்கும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான குடும்பத் திரைப்படமாக உருவாகும் 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் இப்போதே படத்தின் பாடல்கள் மற்றும் அடுத்தகட்ட டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar