அலியாஸ் ருக்மிணி முதல் பாடல்: 'ருக்கு ருக்கு ருக்மிணி' வரும் அக்டோபர் 27ல் ரிலீஸ்!
கிருஷ்ணா மற்றும் ருக்மிணியின் சுவாரசியமான காதல் கதையை மையமாகக் கொண்டு தயாராகியுள்ள 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படத்தின் முதல் தனிப்பாடலான 'ருக்கு ருக்கு ருக்மிணி' வரும் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காதலும் நகைச்சுவையும் கலந்த பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெல்லிசையும் துள்ளலும் கலந்த ஒரு இனிய பாடலாக இது அமையவுள்ளதாகவும், இளைஞர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடிக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இத்திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், பாடலின் வெளியீட்டுடன் படத்தின் புரொமோஷன் பணிகள் முழு வீச்சில் தொடங்குகின்றன.
· Ursvamsishekar