'அலியாஸ் ருக்மிணி' முதல் பாடல் வெளியானது: துள்ளலான இசையில் 'ருக்கு ருக்கு ருக்மிணி'!
தெலுங்கு திரையுலகில் வேகமாக உருவாகி வரும் 'அலியாஸ் ருக்மிணி' (Alias Rukmini) திரைப்படத்தின் முதல் பாடலான 'ருக்கு ருக்கு ருக்மிணி' தற்போது அதிகாரப்பூர்வமாக யூடியூபில் வெளியாகி இசை பிரியர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இசையமைப்பாளர் விஜய் புல்கானின் துள்ளலான இசையில் உருவாகியுள்ள இந்த மெலடிப் பாடலை பிரபல பின்னணி பாடகர் அனுராக் குல்கர்னி பாடியுள்ளார், பூர்ணாச்சாரி ரசிக்கும்படியான அழகான வரிகளை எழுதியுள்ளார். மாஸ்டர் மொயினின் துடிப்பான நடன இயக்கத்தில் கதாநாயகி ருக்மிணியின் கியூட் எக்ஸ்பிரஷன்கள் சமூக வலைதள ரீல்ஸ்களில் தற்போது தீயாகப் பரவி வருகின்றன. இளைஞர்களைக் கவரும் வண்ணம் பாடலின் காட்சிகள் மிகவும் வண்ணமயமாகப் படமாக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் 4 அன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த முதல் பாடலின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
· Ursvamsishekar