யார் அந்த அழகிய 'ருக்மிணி'?: 'அலியாஸ் ருக்மிணி' படக்குழுவின் சுவாரசிய அறிவிப்பு நாளை மாலை வெளியீடு!
திரைப்பட ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக, 'அலியாஸ் ருக்மிணி' (Alias Rukmini) திரைப்படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை 5.49 மணிக்கு வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. காதல் மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் 'ருக்மிணி' கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வதற்காகப் படக்குழுவினர் வெளியிட்டுள்ள முன்னோட்ட வீடியோ இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. யார் அந்த நடிகையாக இருப்பார் என்ற விவாதம் சினிமா ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'அலியாஸ் ருக்மிணி' வெளியாகவுள்ளது. கதாநாயகி யார் என்ற ரகசியம் நாளை மாலை தெரியவரும் நிலையில், படத்திற்கான அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டீசர்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
· Ursvamsishekar