காதல் காவியமாக வரும் 'அலியாஸ் ருக்மணி': டிசம்பர் 3 அன்று வெளிநாடுகளில் பிரீமியர்!

காதல் காவியமாக வரும் 'அலியாஸ் ருக்மணி': டிசம்பர் 3 அன்று வெளிநாடுகளில் பிரீமியர்!

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் 'அலியாஸ் ருக்மணி' திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கிருஷ்ணா மற்றும் ருக்மிணி கதாபாத்திரங்களின் அழகான காதல் தருணங்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள புதிய காட்சி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான பிரத்யங்கிரா சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. டிசம்பர் 3 அன்று உலகளவில் பிரம்மாண்ட பிரீமியர் காட்சிகளுடன் திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அழகிய காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைகளத்துடன் உருவாகியுள்ள இத்திரைப்படம் இளைஞர்களைக் கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அழகிய இசை, சிறப்பான ஒளிப்பதிவு மற்றும் நட்சத்திரங்களின் கவர்க்கூடிய நடிப்புடன் திரைக்கு வரவுள்ள 'அலியாஸ் ருக்மணி' படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்