அலியாஸ் ருக்மிணி ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிசம்பர் 4 திரையரங்குகளில் வெளியீடு
'அலியாஸ் ருக்மிணி' (Alias Rukmini) திரைப்படத்தின் இயக்குனர் முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் அவருக்கு நெகிழ்ச்சியான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளதோடு படத்தின் உலகளாவிய வெளியீட்டுத் தேதியையும் உறுதி செய்துள்ளனர் என்று சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் தெரிவித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட சுவாரசியமான உலகத்தை திரையில் படைத்துள்ள இயக்குனர் முரளியின் இயக்கத்தில் உருவாகும் 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படம், தன் அழகான கதைக்களத்தால் ஏற்கனவே திரை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிறந்தநாள் வாழ்த்து வீடியோவுடன் சேர்த்து, இப்படம் வரும் டிசம்பர் 4 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். உணர்வுப்பூர்வமான காட்சிகளும் அழுத்தமான திரைக்கதையும் இப்படத்தின் சிறப்பம்சமாக இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த புதிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar