யூடியூபில் 42 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்த 'ருக்கு ருக்கு ருக்மிணி': ரிப்பீட் மோடில் ரசிகர்கள்!
நேச்சுரல் ஸ்டார் நானி தயாரித்து வழங்கும் நடிகர் நிதினின் புதிய திரைப்படமான 'அலியாஸ் ருக்மிணி' படத்தின் முதல் பாடலான 'ருக்கு ருக்கு ருக்மிணி', யூடியூபில் 42 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். பாடல் வெளியான நாள் முதல் இசைப் பிரியர்களின் பிளேலிஸ்ட்டில் ரிப்பீட் மோடில் இப்பாடல் ஒலித்து வருகிறது. விஜய் புல்கானின் துள்ளலான இசை மற்றும் அனுராக் குல்கர்னியின் இனிமையான குரலில் உருவாகியுள்ள இந்த காதல் மெலடி பாடல், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கதாநாயகி ருக்மிணியின் சுட்டித்தனமான முகபாவனைகளும் வண்ணமயமான காட்சிகளும் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பூர்ணாச்சாரியின் எளிமையான வரிகள் பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. முழுநீள காதல் மற்றும் குடும்பப் படமாக தயாராகி வரும் 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படம் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாடலுக்கு கிடைத்துள்ள இந்த மகத்தான வரவேற்பு, ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.
· Ursvamsishekar