ரசிகர்களை வைப் செய்ய வைக்கும் 'ருகு ருகு ருக்மிணி': 3.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தல்!

ரசிகர்களை வைப் செய்ய வைக்கும் 'ருகு ருகு ருக்மிணி': 3.5 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தல்!

'அலியாஸ் ருக்மிணி' திரைப்படத்தின் முதல் பாடலான 'ருகு ருகு ருக்மிணி' சமூக வலைதளங்களில் வெளியாகி 3.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் புல்கானின் துள்ளலான இசையில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இப்பாடலுக்கு பூர்ணாச்சாரி வரிகள் எழுதியுள்ளார். மொயின் நடன அமைப்பில் உருவாகியுள்ள இந்த உற்சாகமான பாடல் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் செய்ய வைக்கக்கூடிய சிறந்த வைப் பாடலாக மாறியுள்ளது. இசை பிரியர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர். டிசம்பர் 4 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடலே கிடைத்துள்ள இந்த பிரம்மாண்ட வரவேற்பு படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்