படப்பிடிப்பை நிறைவு செய்தது 'அலியாஸ் ருக்மிணி': டிசம்பர் 4-ல் திரையரங்குகளில் வெளியீடு!
ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் தூண்டியுள்ள ரொமாண்டிக் திரைப்படமான 'அலியாஸ் ருக்மிணி' தனது முழு படப்பிடிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. படக்குழுவினர் அனைவரும் ஒன்று கூடி கேக் வெட்டி கொண்டாடிய படப்பிடிப்பு நிறைவு புகைப்படங்களை சினிமா தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அழகான உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள இத்திரைப்படம், காதலர்கள் மற்றும் இளசுகளைக் கவரும் வகையில் அனைத்து அம்சங்களுடன் நேர்த்தியாக இயக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், படக்குழு தற்போது பின்னணி இசை, டப்பிங் உள்ளிட்ட இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இன்னும் 25 நாட்களில், வரும் டிசம்பர் 4 அன்று 'அலியாஸ் ருக்மிணி' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீடுகள் குறித்த அடுத்தகட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· Ursvamsishekar