அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்: சுகுமார் இயக்கத்தில் உருவாகும் 'புஷ்பா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, அவர் இயக்குனர் சுகுமாருடன் இணையும் புதிய திரைப்படத்திற்கு 'புஷ்பா' என தலைப்பிடப்பட்டு அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கரடுமுரடான லாரியில் இருந்து இறங்கும் செம்மரக் கடத்தல்காரர் தோற்றத்தில் அல்லு அர்ஜுன் தோன்றும் இந்த போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்யா மற்றும் ஆர்யா 2 வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் மூன்றாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக புஷ்பா உருவாக உள்ளது. மாறுபட்ட சிகை அலங்காரத்துடன் அசல் ரஸ்டிக் லுக்கில் அல்லு அர்ஜுன் மிரட்டியுள்ள இந்த முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
· Only Kollywood