மோஷன் கேப்சரில் உலக சாதனை படைத்த அல்லு அர்ஜுனின் 'ராக்கா': கின்னஸ் சாதனைப் பட்டியலில் சன் பிக்சர்ஸ்

மோஷன் கேப்சரில் உலக சாதனை படைத்த அல்லு அர்ஜுனின் 'ராக்கா': கின்னஸ் சாதனைப் பட்டியலில் சன் பிக்சர்ஸ்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் 'ராக்கா' திரைப்படம், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதிய கின்னஸ் உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த சர்வதேச சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையை அதிகாரப்பூர்வ சான்றிதழுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் நிகழ்நேரத்தில் 37 கலைஞர்களை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்து இந்த உலக சாதனையை படக்குழு நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு எந்தவொரு திரைப்படமும் இத்தகைய சிக்கலான நவீன தொழில்நுட்ப சோதனையை இவ்வளவு பெரிய அளவில் ஒரே நேரத்தில் நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன் அட்லீ இப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் 'ராக்கா', படத்தின் தொடக்க நிலையிலேயே சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று உலகளாவிய சினிமா ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

· Sun Pictures

பழைய செய்திகள்