அல்லு அர்ஜுனின் மெகா திரைப்பட வரிசை: அட்லீ, லோகேஷ் கனகராஜ் முதல் சந்தீப் ரெட்டி வாங்கா வரை
புஷ்பா திரைப்படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்து இணையவிருக்கும் முன்னணி இயக்குனர்களின் பட்டியல் எக்ஸ் தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து பிரம்மாண்ட திரைப்படங்களில் அவர் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ராக்கா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ஏஏ23, மின்னல் முரளி இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் ஏஏ24 என அட்டகாசமான திட்டங்கள் தயாராகி வருகின்றன. மேலும் அனிமல் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஏஏ25 மற்றும் மாஸ் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனுவுடன் ஏஏ26 என இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வரிசையை அல்லு அர்ஜுன் கட்டமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரையுலகின் டாப் இயக்குனர்களுடன் அல்லு அர்ஜுன் மேற்கொள்ளும் இந்த மெகா கூட்டணிகள் பான் இந்தியா அளவில் வசூல் வேட்டை நடத்தும் என வர்த்தக வட்டாரங்கள் கணித்து வருகின்றன.
· @_movietamil