அமல் நீரத் இயக்கத்தில் 'பேச்சிலர் பார்ட்டி DEUX': நஸ்ரியா, டோவினோ, நஸ்லென் இணையும் பிரம்மாண்ட படம்!

அமல் நீரத் இயக்கத்தில் 'பேச்சிலர் பார்ட்டி DEUX': நஸ்ரியா, டோவினோ, நஸ்லென் இணையும் பிரம்மாண்ட படம்!

மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட படைப்பான 'பேச்சிலர் பார்ட்டி DEUX' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது.\n\n2012-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 'பேச்சிலர் பார்ட்டி' படத்தின் அடுத்த பாகமாக உருவாகும் இப்படத்தில் மலையாள திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே களம் காண்கிறது. நஸ்ரியா நசீம், நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி, ஷைன் டாம் சாக்கோ, நதியா மற்றும் ஜோதிர்மயி உள்ளிட்ட பல முன்னணி நடிகர் நடிகைகள் இதில் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.\n\nஉன்னி ஆர் எழுத்தில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் அடுத்தடுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமல் நீரத்தின் தனித்துவமான மேக்கிங்கில் உருவாகும் இந்த ஆக்ஷன் என்டர்டெய்னர் பற்றிய அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

· Sony Music South

பழைய செய்திகள்