அமல் நீரத்தின் பிரம்மாண்ட கூட்டணி: பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ் ஆடியோவை கைப்பற்றிய சோனி மியூசிக்!

அமல் நீரத்தின் பிரம்மாண்ட கூட்டணி: பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ் ஆடியோவை கைப்பற்றிய சோனி மியூசிக்!

மலையாள சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பிரம்மாண்ட மல்டிஸ்டாரர் திரைப்படமான 'பேச்சுலர் பார்ட்டி டியூக்ஸ்' படத்தின் ஒட்டுமொத்த இசை உரிமையையும் சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், நஸ்ரியா, நஸ்லென், சௌபின் சாஹிர், ஷைன் டாம் சாக்கோ, நதியா மொய்து, ஜோதிர்மயி என மலையாளத்தின் மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே ஒன்றிணைந்துள்ளது. உன்னி ஆர் எழுத்தில் உருவாகும் இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய மாஸ் தருணங்கள் படத்தில் நிறைந்திருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. அமல் நீரத்தின் தனித்துவமான மேக்கிங் பாணி மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி அமைப்புகளுடன் தயாராகும் இப்படத்தின் பாடல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளதாக சோனி மியூசிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்