அமல் நீரத் இயக்கியுள்ள 'பேச்சிலர் பார்ட்டி 2': நாளை பிரம்மாண்ட ரிலீஸ், முன்பதிவு விறுவிறுப்பு!
பிரபல மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய அதிரடித் திரைப்படமான 'பேச்சிலர் பார்ட்டி 2' (Bachelor Party Deux) நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரே நாள் மட்டுமே உள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருவதாக பி.ஆர்.ஓ சதீஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள சினிமாவில் தனி முத்திரை பதித்த 'பேச்சிலர் பார்ட்டி' படத்தின் அடுத்த பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. இதில் நஸ்லேன், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், சௌபின் ஷாஹிர், ஷரபுதீன், ஸ்ரீநாத் பாசி, நஸ்ரியா நசீம், நதியா மொய்து, ஜோதிர்மயி, ரஜிஷா விஜயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். உன்னி ஆர் வசனம் எழுதியுள்ளார். குற்றப் பின்னணி, நகைச்சுவை மற்றும் மாஸ் காட்சிகள் நிறைந்த அமல் நீரத்தின் பிரத்யேக மேக்கிங்கில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தென்னிந்தியாவில் பியூச்சர் ரன் அப் பிலிம்ஸ் வெளியிடும் இப்படத்தின் முன்பதிவு வேகமாக நிரம்பி வருகிறது.
· Prosathish