அமல் நீரத்தின் 'பேச்சிலர் பார்ட்டி 2': இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியீடு

அமல் நீரத்தின் 'பேச்சிலர் பார்ட்டி 2': இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை வெளியீடு

ஸ்டைலிஷ் படங்களின் இயக்குனர் அமல் நீரத் இயக்கத்தில் பிரம்மாண்ட நட்சத்திரப் பட்டாளத்துடன் உருவாகி வரும் 'பேச்சிலர் பார்ட்டி 2' (Bachelor Party D'eux) திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது. இப்பாடலை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தனது தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. அமல் நீரத் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென், குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், சௌபின் சாஹிர், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து நடிக்கின்றனர். வித்தியாசமான மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் தயாராகி வரும் இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகவுள்ள இரண்டாவது பாடல் இசைப் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்