அமல் நீரத்தின் பேச்சிலர் பார்ட்டி 2: அமெரிக்க திரையரங்கு பட்டியலை வெளியிட்டது பிரைம் மீடியா!

அமல் நீரத்தின் பேச்சிலர் பார்ட்டி 2: அமெரிக்க திரையரங்கு பட்டியலை வெளியிட்டது பிரைம் மீடியா!

மலையாள திரையுலகின் முன்னணி ஸ்டைலிஷ் இயக்குனரான அமல் நீரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் த்ரில்லர் படமான பேச்சிலர் பார்ட்டி 2 (Bachelor Party D'EUX) விரைவில் வெளிவரவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் முழுமையான பட்டியலை பிரைம் மீடியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளது. தனது தனித்துவமான கேமரா கோணங்கள், துடிப்பான திரைக்கதை மற்றும் ஸ்டைலான மேக்கிங் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வரும் அமல் நீராத், இப்படத்தில் முழு நீள ஆக்ஷன் மற்றும் காமெடியை கலந்து புதிய அனுபவத்தை வழங்கியுள்ளார். மலையாள சினிமா ரசிகர்கள் பலரும் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த இந்த இரண்டாம் பாகம், அமெரிக்காவில் உள்ள முக்கிய திரையரங்குகளில் நவம்பர் 20 அன்று களமிறங்குகிறது. நண்பர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் கொண்டாடும் வகையில் கலகலப்பான திரை விருந்தாக அமைந்துள்ள பேச்சிலர் பார்ட்டி 2 படத்திற்கான முன்பதிவுகள் அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. தரமான மலையாள சினிமாக்களைத் தொடர்ந்து கொண்டாடும் அமெரிக்க ரசிகர்களுக்கு இந்த வார இறுதியில் ஒரு சிறந்த எண்டர்டெய்னர் காத்திருக்கிறது.

· Primemediaus

பழைய செய்திகள்