'தொலைநோக்குப் பார்வை தேசிய அங்கீகாரமாக மாறிய தருணம்': 'அமரன்' படத்திற்காக பெருமிதம் கொள்ளும் RKFI

ஒரு திரைப்படப் படைப்பாளியின் உண்மையான உழைப்பும் தொலைநோக்குப் பார்வையும் தேசிய அங்கீகாரமாக மாறும் போது அது அளப்பரிய பெருமைக்குரிய தருணமாகிறது என்று 'அமரன்' திரைப்படத்தின் தேசிய சாதனை குறித்து தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேசபக்தியையும் குடும்பப் பாசத்தையும் சமவிகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்ததோடு, தற்போது தேசிய அளவிலான உயரிய கௌரவத்தையும் தட்டிச் சென்றுள்ளது. தயாரிப்பாளர் கமல்ஹாசனின் தொலைநோக்குப் பார்வையில் உருவான இப்படம் உயர்தரமான திரைக்கலைக்கான உதாரணமாகத் திகழ்கிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரம் இதன் மூலம் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரின் கூட்டு உழைப்பிற்கு கிடைத்த இந்த வரலாற்று தருணத்தை தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் சமூக வலைதளங்களில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

· Prosathish

பழைய செய்திகள்