'ஷோலே' கபார் சிங்காக உலகை அச்சுறுத்திய பழம்பெரும் நடிகர்: அம்ஜத் கானின் 86-வது பிறந்தநாள்!
இந்திய சினிமா வரலாற்றில் வில்லன் கதாபாத்திரங்களுக்கே புதிய அடையாளத்தை வகுத்துக் கொடுத்த மறைந்த பழம்பெரும் நடிகர் அம்ஜத் கானின் 86-வது பிறந்தநாள் இன்று நினைவுகூரப்படுகிறது. அவரது ஆளுமைமிக்க நடிப்பு மற்றும் மறக்க முடியாத திரை வசனங்களை சினிமா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 1975-ஆம் ஆண்டு வெளியான வரலாற்று சிறப்புமிக்க 'ஷோலே' திரைப்படத்தில் கபார் சிங் என்ற கொடூர கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் உறைய வைத்தார் அம்ஜத் கான். கித்னே ஆத்மி தே என்ற அவரது ஒற்றை வசனம் இன்று வரை சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. சுமார் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், வில்லன் வேடங்களில் மட்டுமல்லாமல் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனது தடத்தைப் பதித்த அம்ஜத் கான், இளம் வயதிலேயே மறைந்தாலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மறக்க முடியாத தனித்துவமான வில்லன் நாயகனாக என்றென்றும் நிலைத்து நிற்கிறார்.
· Actor Kayal Devaraj