மலையாளத் திரைப்படம் 'அனலி' வெளியீட்டுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் தடை: பின்னணி என்ன?

மலையாளத் திரைப்படம் 'அனலி' வெளியீட்டுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் தடை: பின்னணி என்ன?

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கூடத்தாய் சயனைடு கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவான 'அனலி' (Anali) மலையாள திரைப்படத்தின் ரிலீசுக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தன் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை சயனைடு கொடுத்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஜோலி ஜோசப் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை படத்தை வெளியிடக் கூடாது என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தற்காலிக தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்படும் கிரைம் திரில்லர் திரைப்படங்கள் சட்ட சிக்கல்களை எதிர்கொள்வது வழக்கமாகிவிட்டது. நீதிமன்றத் தடையைத் தொடர்ந்து படக்குழுவினர் மேல்முறையீடு செய்ய உள்ளார்களா அல்லது வெளியீட்டுத் தேதி தள்ளிப்போகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

· @xpresscinema

பழைய செய்திகள்