கயல் ஆனந்தியின் 'கரிவிடி லக்ஷ்மி': திரையரங்கு ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்களே பாக்கி!
நடிகை 'கயல்' ஆனந்தி முதன்மை வேடத்தில் நடித்துள்ள 'கரிவிடி லக்ஷ்மி' திரைப்படம் திரைக்கு வர இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், படக்குழுவினர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படம் அக்டோபர் 17 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கௌரி நாயுடு ஜம்மு இயக்கத்தில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ள இப்படம், வட ஆந்திராவின் புகழ்பெற்ற 'புர்ரகதா' நாட்டுப்புறக் கலைஞரின் உண்மை வாழ்க்கையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலை வடிவம், சமூக போராட்டங்கள் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கையை மையமாகக் கொண்ட கதையில் ஆனந்தி மிக ஆழமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சரண் அர்ஜுன் இசையில் வெளியான நாட்டுப்புறப் பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ராக் மயூர், நரேஷ், ராசி மற்றும் சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த உணர்வுப்பூர்வமான இசைப் படம், வரும் அக்டோபர் 17 முதல் ரசிகர்களுக்கு சிறப்பான கலை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar