பிரைம் வீடியோவில் டாப் 6 டிரெண்டிங்கில் ஆர்யாவின் 'அனந்தன் காடு' திரைப்படம்!

பிரைம் வீடியோவில் டாப் 6 டிரெண்டிங்கில் ஆர்யாவின் 'அனந்தன் காடு' திரைப்படம்!

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமான 'அனந்தன் காடு', அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தின் டிராமா திரைப்படப் பிரிவில் முதல் 6 இடங்களில் டிரெண்டாகி வருவதாக ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மினி ஸ்டுடியோஸ் மற்றும் கோகுலம் மூவிஸ் தயாரிப்பில், கோகுலம் கோபாலன் வழங்கிய இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசை அமைத்துள்ளார். அடர்ந்த காடுகளின் பின்னணியில் விறுவிறுப்பான புதிர்களும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த கதையம்சம் ஓடிடி தளத்தில் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு முன்னணி டிஜிட்டல் தளத்தில் வெளியாகியுள்ள 'அனந்தன் காடு', த்ரில்லர் காட்சிகளுக்காகவும் ஆர்யாவின் தனித்துவமான கதாபாத்திரத்திற்காகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று முன்னேறி வருகிறது. வார இறுதி நாட்களில் அதிகம் பார்க்கப்படும் படங்களின் வரிசையில் இது தொடர்ந்து இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

· Apifilms

பழைய செய்திகள்