விக்ரம் படத்தின் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ: நினைவுகளைப் பகிர்ந்த அன்பறிவ் மாஸ்டர்கள்

விக்ரம் படத்தின் சண்டைக் காட்சி மேக்கிங் வீடியோ: நினைவுகளைப் பகிர்ந்த அன்பறிவ் மாஸ்டர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விக்ரம். இப்படத்தில் இடம்பெற்ற அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்தன. இந்நிலையில் படத்தின் மறக்க முடியாத சண்டைக் காட்சி படப்பிடிப்பு வீடியோவை சண்டைப் பயிற்சியாளர்களான அன்பறிவ் தங்களின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சண்டைக் காட்சிகளை அமைப்பது வாழ்நாளில் மிக அரிதான மற்றும் பேரின்பமான அனுபவம் என்று அன்பறிவ் மாஸ்டர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். லோகேஷ் கனகராஜின் பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இது எங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என உற்சாகமாகப் பதிவிட்டுள்ளனர். விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் சண்டைக் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. விக்ரம் படத்தின் இத்தகைய மேக்கிங் வீடியோக்கள் வெளியான போதெல்லாம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதைக் கொண்டாடித் தீர்த்தனர். இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

· Anbariv

பழைய செய்திகள்