10வது நாளில் அன்பில் அவன்: அசோக் செல்வனின் ஆக்ஷன் அவதாரமும் பீட்டர் ஹெய்னின் சண்டைப்பயிற்சியும்!
அசோக் செல்வன் நடிப்பில் திரைக்கு வந்துள்ள அன்பில் அவன் திரைப்படம் தனது 10வது வெற்றி நாளை எட்டியுள்ளது. கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன், இப்படத்தில் ஆக்ஷன் கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளை பிரபல சண்டைப்பயிற்சி இயக்குனர் பீட்டர் ஹெய்ன் அமைத்துள்ளார். கதையின் நாயகன் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு தள்ளப்படும்போது எழும் மோதல் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் அமைத்த அனல் பறக்கும் சண்டைப்பயிற்சி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. எதார்த்தமும் விறுவிறுப்பும் கலந்த இந்த சண்டைக்காட்சிகள் திரையரங்குகளில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. திரையரங்குகளில் இரண்டாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அன்பில் அவன் திரைப்படம், வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் குடும்ப ரசிகர்களின் வருகை அதிகரித்து வருவதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
· Only Kollywood