அன்பில் அவன் படத்தில் யோகி பி பாடிய பாட்ஷா டா பாடல் வீடியோ வெளியானது
திரையரங்குகளில் வெற்றிகரமான வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் 'அன்பில் அவன்' திரைப்படத்திலிருந்து 'பாட்ஷா டா' என்ற துள்ளலான பாடல் வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ராப் பாடகர் யோகி பி பாடியுள்ள இந்த பாடல் வீடியோவை படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். கோவிந்த் வசந்தாவின் ஆட்டம்போட வைக்கும் துள்ளல் இசையில் யோகி பி-யின் அதிரடி வரிகளும் அசோக் செல்வனின் சுறுசுறுப்பான நடன அசைவுகளும் இணைந்து திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. கார்த்திக் கேன் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வனுடன் பிரீத்தி முகுந்தன் கதாநாயகியாக நடித்துள்ளார். திரையரங்கு கொண்டாட்டத்தை அப்படியே கொண்டு வந்துள்ள இந்த வீடியோ தற்போது யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. காதல் மற்றும் நட்பின் அழகை கொண்டாடும் அன்பில் அவன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவுடன் பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து சிறப்பான வெற்றியை குவித்து வருகிறது.
· Actor Kayal Devaraj