அன்பில் அவன் படத்திற்கு 4/5 ரேட்டிங்: அசோக் செல்வனின் நடிப்பிற்கு கயல் தேவராஜ் பாராட்டு!
அசோக் செல்வன் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தைப் பார்த்த பிரபல நடிகர் கயல் தேவராஜ், தனது விரிவான விமர்சனக் குறிப்பை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் படத்திற்கு 4/5 என்ற மிகச் சிறந்த மதிப்பீட்டையும் வழங்கி படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அசோக் செல்வன் இப்படத்திற்கு அருமையான திரைக்கதை எழுதி மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சி இதுவரை எந்தவொரு தமிழ் படத்திலும் பார்த்திராத புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பீரித்தி முகுந்தன், மறைந்த டெல்லி கணேஷ், கதிர் பாலு, சாபுமோன், ரேவதி ஆகியோரின் எதார்த்தமான நடிப்பும், கவுதம் ராஜேந்திரனின் வண்ணமயமான ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் ஆழமான இசையும் படத்திற்கு மிகப்பெரிய தூண்களாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பக்கா கமர்ஷியல் பார்முலாவில் ஒரு ஜனரஞ்சகமான திரைப்படத்தை இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் வழங்கியுள்ளதாகவும், அசோக் செல்வனின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத வெற்றிப் படமாக அமையும் என்றும் கயல் தேவராஜ் வாழ்த்தியுள்ளார்.
· Actor Kayal Devaraj